மருத்துவமனையில் அனுமதி மறுப்பு: மரத்துக்குக் கீழே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
தெலங்கானாவில் பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், மரத்தின் கீழே குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானாவில் பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், மரத்தின் கீழே குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து கர்ப்பிணி பாத்திமாவின் தாய் ஷேக் பீ கூறுகையில், காலை 10 மணிக்கு பிரசவ வலியோடு மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தோம். இங்குதான் ஆரம்பம் முதலே என் மகள் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அவளை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்ட மருத்துவர்கள் வாரங்கலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.
ஆனால் எங்களுக்கு ஆம்புலன்ஸ் கூட கிடைக்கவில்லை. மரத்தடியில் காத்திருந்த போதே, மயங்கி விழுந்த எனது மகளுக்கு அங்கேயே குழந்தை பிறந்துவிட்டது.
குழந்தை பிறந்ததும், குழந்தையையும், மகளையும் செவிலியர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அதன்பிறகு எனது மகளின் நிலை என்னவென்று எதுவும் தெரியவில்லை என்று கண்ணீரோடு கூறுகிறார் ஷேக் பீ.