இன்று மாலை கூடுகிறது ராஜஸ்தான் அமைச்சரவைக் கூட்டம்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதையடுத்து, துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து பைலட் நீக்கப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் மீது நோட்டீஸ் தொடர்பாக 24-ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பேரவைத் தலைவரை கேட்டுக்கொண்டதோடு, வழக்கின் தீர்ப்பை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று மாலை அசோக் கெலாட் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.