முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் இன்று 351 பேருக்குத் தொற்று: 30 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 574 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
corona
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 574 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் கரோனா தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 30,741 ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 21,494 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 7,868 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

இன்று புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், ஆல்வாரில் 103, ஜலூரில் 43, நாகூரில் 32, அஜ்மீரில் 27, சிரோஹியில் 23, தௌஸாவில் 18 மற்றும் கோட்டாவில் 15 பேருக்கும் பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.