முகப்பு
இந்தியா

ஹைதராபாத்: ரத்த வெள்ளத்தில் மனைவி மரணம்; கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கைரதாபாத் அருகே பி.எஸ். மக்தா குடியிருப்புக் கட்டடத்தின் மாடியில் இருந்து கணவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் மனைவி ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
ஹைதராபாத்: ரத்த வெள்ளத்தில் மனைவி மரணம்; கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
பகிர்:


ஹைதராபாத்: கைரதாபாத் அருகே பி.எஸ். மக்தா குடியிருப்புக் கட்டடத்தின் மாடியில் இருந்து கணவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் மனைவி ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகேஸ்வர ராவ் (36) செவ்வாய்க்கிழமை மாலை தனது குடியிருப்புக் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார், இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கே அவரது மனைவி ரோஜா, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

ஆனால், அவர்களது இரண்டு பிள்ளைகளும் பத்திரமாக வீட்டில் இருந்தனர். அவர்கள் சொல்லொணாத் துயரத்திலும், அதிர்ச்சியையும் அடைந்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறை, இரண்டு உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கணவன், மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களது பிள்ளைகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →