மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உள்பட மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புது தில்லி: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உள்பட மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் இருந்து 61 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜி.கே வாசனும் பதவியேற்றுக் கொண்டனர். மூன்று பேரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.