இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 5,030 பேருக்கு கரோனா

DIN


கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,030 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,030 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் அதிகபட்சமாக 2,207 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 80,863 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 97 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 29,310 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 49,931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 640 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT