128 UP jail inmates test positive for Covid 
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 128 சிறைக் கைதிகளுக்குத் தொற்று: சிறைச்சாலையை கரோனா வார்டாக மாற்றம்

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள நான்கு கூடங்களை லெவல் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளன. 

IANS

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள நான்கு கூடங்களை லெவல் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளன. 

இதுகுறித்து சிறைச்சாலை இயக்குநர் கூறுகையில், 

சிறைச்சாலையில் முதலில் இரண்டு பேருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சிறையில் உள்ள கைதிகளுக்கு சோதனை மேற்கொண்டபோது 126 பேருக்கு அறிகுறியில்லாமலேயே தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இதுவரை, ஜான்சி மாவட்ட சிறையில் 748 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 126 கைதிகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் உள்ள நான்கு கூடங்கள் லெவல் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 120 பேர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையாக்கப்பட்டு வருகின்றது. 

கைதிகளைக் கண்காணிக்கச் சிறைச்சாலையில் மூன்று மருத்துவக் குழுக்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேவைப்பட்டால் கைதிகளை ஜான்சி மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பத் தயாராக உள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT