இந்தியா

ஒடிசாவில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கரோனா நோயாளி குணமடைந்தார்

DIN


ஒடிசா மாநிலத்தில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் கரோனா நோயாளி, தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த 48 வயது பெண் நோயாளி அஸ்வினி கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒடிசாவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் பெண் நோயாளி, குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.

ஒடிசாவில் தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வரும் நிலையில், இன்று அந்த மாநிலத்தில் புதிதாக 1,594 பேருக்கு கரோனா உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,693 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதிப்பு தீவிரமடையும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றிருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT