இந்தியா

ரேடியோ அலைவரிசை அடையாள டேக்-ஐ அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும் 2022 டிசம்பருக்குள் பொருத்த திட்டம்

DIN

ரேடியோ – அலைவரிசை அடையாள டேக்குகளை (ஆர்எஃப்ஐடி) அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும், 2022 டிசம்பர் மாதத்திற்குள் பொருத்தி முடிப்பதென ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. 

இது அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளின் தடத்தைக் கண்டறிய உதவும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 23,000 சரக்குப் பெட்டிகளுக்கு டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கொவைட்-19 பெருந்தொற்றால் இந்தப் பணி சிறிது மந்தப்பட்டாலும், தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரயில்வேத் துறை சரக்கு ரயில் பெட்டிகள் தொடர்பான தகவல்களை பணியாளர்களைக் கொண்டு பராமரித்து வந்தாலும் இவற்றில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆர்எஃப்ஐடி கருவிகளால் சரக்குப் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT