இந்தியா

தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும்: அசோக் கெலாட்

DIN


ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திப்போம், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அசோக் கெலாட் பேசுகையில், "தேவைப்பட்டால் நாம் குடியரசுத் தலைவரைச் சந்திப்போம். மேலும் அவசியப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்துவோம்." என்றார்.

இதைத் தொடர்ந்து அசோக் கெலாட் இன்று ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான புதிய முன்மொழிவை வழங்கவுள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மிகவும் குறுகிய கால அறிவிப்புடன் பேரவையைக் கூட்ட வேண்டும் என்று ஜூலை 23 இரவு மாநில அரசு கோரியிருந்தது. அமைச்சரவைக் குறிப்பில் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை. மேலும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவும் இல்லை. அவர்களது கோரிக்கை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

பேரவையை குறுகிய காலத்தில் கூட்டுவதற்கு அதில் எவ்விதக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. சாதாரண நடைமுறைப்படி, பேரவையைக் கூட்டுவதற்கு 21 நாள்கள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT