அமைச்சர் ராஜ்நாத் சிங் 
இந்தியா

'சவாலான சூழ்நிலையில் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்கள்' - அமைச்சர் ராஜ்நாத் சிங்

கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். 

DIN

கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். 

கார்கில் போர் 21-ஆவது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கார்கில் நமது சுய மரியாதையின் சின்னம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையும் கூட. நாட்டின் தற்காப்புக்காகவே அன்றி இது தாக்குதல் அல்ல என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.

கார்கில் விஜய் திவாஸ் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க ராணுவ வீரர்களின் சேவை, வீரம் மற்றும் தியாகத்தின் கொண்டாட்டம் ஆகும். நமது ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியமும், தேசபக்தியும் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

போரில் பங்கேற்று ஊனமுற்றவர்களாக ஆன போதிலும், தொடர்ந்து தங்களால் முடிந்தவரை நாட்டுக்கு சேவை செய்யும் வீரர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கார்கில் விஜய்யின் 21-ஆவது நினைவு தினத்தில், வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT