இந்தியா

ஆந்திரத்தில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

DIN


ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,051 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகளை அந்த மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6,051 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,02,349 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49,558 பேர் குணமடைந்துள்ளனர். 1,090 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 51,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திரத்தில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,210 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,696 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT