கோப்புப் படம் 
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 49,931 பேருக்கு கரோனா பாதிப்பு; 708 பேர் பலி

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 49,931 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 49,931 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகளின்படி திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 49,931 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,35,453 -ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 9,17,568 ஆக அதிகரித்தது. 4,85,114 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 708 போ் உயிரிழந்தனா். இதன் மூலமாக நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,771-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 375799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 213238 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13656 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தில் 213723 பேருக்கும், தில்லியில் 130606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT