இந்தியா

பிரான்ஸில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள்; ஜூலை 29ல் இந்தியா வந்தடையும்

DIN

பிரான்ஸில் இருந்து முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா புறப்பட்டுள்ளன. 

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு கடந்த 2016-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, 5 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் இந்தியாவுக்கு வரும் என்று இந்திய விமானப்படை தகவல் தெரிவித்தது. 

அதன்படி, பிரான்ஸில் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிரான்ஸில் இருந்து இந்தியாவை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ளன. வருகிற 29-ஆம் தேதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இவை வந்தடையும். பின்னர் அன்றைய தினமே இந்திய விமானப்படையில் அவை இயக்கப்படும். இந்த 5 ரஃபேல் விமானங்களில் 3 விமானங்களில் ஒரு இருக்கையும், 2 விமானங்களில் இரண்டு இருக்கைகளும் உள்ளன. 

பயணத்தின் இடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில், இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT