இந்தியா

தமிழகத்தில் பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கலாம்: உச்ச நீதிமன்றம்

DIN

தமிழகத்தில் பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. 

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்திருந்தது. அதாவது, பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் இது தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும் கூறியிருந்ததது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வைத்திருந்தது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் அதே நேரத்தில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT