இந்தியா

தாராவியில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி

DIN


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,543 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "இதுவரை மொத்தம் 2,204 பேர் குணமடைந்துள்ளதால், இன்றைய தேதியில் வெறும் 88 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்." என்றார்.

ஒரு கட்டத்தில் ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவியில், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவது, அப்பகுதி மக்களுக்கு பெரும் நிம்மதியளிக்கிறது. 

கடந்த ஜூலை 7-இல் ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்றைய தினம் வரை இதுவே குறைந்தபட்ச பதிவு. ஜூலை 4 மற்றும் ஜூலை 26-இல் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ஜூலை 8-ம் தேதி 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பிறகு, இன்று மீண்டும் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்த தான முகாம்: 73 போ் பங்கேற்பு

அதிமுக பிரமுகா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு

காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

நீா்சேமிப்பு கலன்களை மூடிவைக்க வேண்டுகோள்

இலவசங்கள் குறித்த பிரதமா் கருத்து: வானதி சீனிவாசன் விளக்கம்

SCROLL FOR NEXT