இந்தியா

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு: சோனியா ஆதரவு

DIN


மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நிலைநாட்ட ஆதரவு தெரிவிப்பதாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, சோனியா காந்தி, சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, தேவ கவுடா, மனோஜ் ஜா, ஜெகன் மோகன் ரெட்டி, கே.சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்ரே, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத் பவார் 
உமர் அப்துல்லா ஆகியோரை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார் மு.க. ஸ்டாலின். 

அப்போது,

1. உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது

2. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது

3. மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிற்கு அழுத்தம் தருமாறு அவர்களிடம் மு.க. ஸ்டாலின் ஆதரவு கோரினார்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நிலைநாட்ட ஆதரவு தெரிவிப்பதாக மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தியின் ஆதரவுக்கு மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT