மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 2 காவலர்கள் பலி: புதிதாக 138 பேருக்குத் தொற்று
மகாராஷ்ர மாநிலத்தில் புதிதாக 138 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்ர மாநிலத்தில் புதிதாக 138 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இதுவரை 9,096 காவலர்கள் கரோனா பாதித்துள்ளனர். இதில், 7,084 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 100 காவலர்கள் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது முதல் நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிக பாதிப்புடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிரத்தில் முன்களப் பணியாளர்களான காவல்துறையினருக்கு அதிகளவில் கரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் 1,46,433 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதில் 2,39,755 பேர் குணமடைந்துள்ளனர். 14,463 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.