மணிப்பூரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலி
மணிப்பூரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலியாகியுள்ளார்.
மணிப்பூரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலியாகியுள்ளார்.
கரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. எனினும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மணிப்பூரை பொறுத்தவரை 819 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அங்கு கரோனாவுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இத்துடன் மணிப்பூரில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 48 வயதுடைய அந்த நபருக்கு கடந்த 26ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
Advertisement
இதையடுத்து அவர் தலைநகர் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.