இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 4,46,642 கரோனா பரிசோதனைகள்:  ஐசிஎம்ஆர்

DIN

புதுதில்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவில் புதன்கிழமை (ஜூலை 29) ஒரே நாளில் மட்டும் 4,46,642 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் புதன்கிழமை மட்டும் 4,46,642 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தமாக 1,81,90,382 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையானது மேலும் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக 52,123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 15,83,792 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் 5,28,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 10,20,582 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT