இந்தியா

கரோனாவில் இருந்து மீண்ட 100 வயது மகாராஷ்டிர மூதாட்டி வீடு திரும்பினார்

PTI


புணே: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி, கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜூலை 20ம் தேதி மூதாட்டியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கரோனா தனிமைப்படுத்தும்ட மையத்துக்கு வரும் போது, மூதாட்டிக்கு எந்த அறிகுறியோ, ஆக்ஸிஜன் குறைபாடோ இருந்திருக்கவில்லை.

ஆனால், சில நாள்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆனால் அவருக்கு வேறு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காததால், சிறப்பு மையத்திலேயே தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டார். ஒரு சமயம் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனால் மருத்துவர்களின் அயராத முயற்சியால் அவரது உடல்நிலை மீண்டும் சீரடைந்து, உடல்நலம் அடைந்தார். கரோனாவில் இருந்து மீண்ட நூறு வயது மூதாட்டி, கடந்த செவ்வாயன்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் கரோனா சிறப்பு மையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கரோனாவில் இருந்து மீண்டார்களா என்பதை அறிய மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டாம் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, வீடு திரும்பும் போது அந்த மூதாட்டிக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT