முகப்பு
இந்தியா

எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் பயிற்சி பெற்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயிற்சி பெற்ற மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெ

Updated On : 1 ஜூன், 2020 at 12:03 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயிற்சி பெற்ற மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

நௌசேரா செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அதையடுத்து அவர்கள் விழிப்புடன் இருந்ததால், எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற மூன்று பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, புல்வாமா காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இராணுவம் ஆகியவற்றின் சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டதால் வாகனம் மூலம் வந்த ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.