இந்தியா

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடிக்கு சலுகை: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

DIN


சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி அளவிலான நிவாரண சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாலை 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். 

இதன்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண சலுகைகளை அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ரூ. 50,000 கோடி வரை முதலீடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 வரை வங்கிகளில் கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 14 விவசாய விளை பொருள்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதத்திலிருந்து 83 சதவீதத்துக்கு உயர்த்தப்படுவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT