முகப்பு
இந்தியா

அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் பலி: பலர் காயம் 

அசாம் மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 2 ஜூன், 2020 at 5:36 PM
பகிர்:

அசாம் மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல  கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

Advertisement

இதில் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.  ஹைலகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் காயமடைந்தனர். 

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.