முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு புதிதாக 86 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 46 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 26 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இன்று மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 627 பேர் குணமடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →