இந்தியா

கேரளத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று

DIN


கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். இதன்படி, கேரளத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 47 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 37 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள்.

தற்போதைய நிலையில், 854 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 1,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 10 ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 124 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.

கரோனா மையம் அல்லது வீடுகளில் 1,68,578 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனைகளில் 1,487 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT