முகப்பு
இந்தியா

சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரயிலில் குழந்தைப் பிறந்தது!

சிறப்பு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:

புவனேஸ்வர்:  சிறப்பு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்துள்ளனர். 

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமாக, வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பச் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதில் பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குப் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கால் தெலங்கானாவில் சிக்கியிருந்த 19 வயது புலம்பெயர்ந்த கர்ப்பிணி ஒருவர் ஒடிசாவிற்கு சிறப்பு ரயில் மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, உடன் இருந்த பயணிகளே பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

மேலும், அவரை திதிலாகரில் உள்ள ரயில்வே மருத்துவர் பரிசோதித்ததில் அவர்கள் நல்ல நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து திதிலாகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தாயும், சேயும் மாற்றப்பட்டனர். 

ஒடிசாவில் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பிறந்த மூன்றாவது குழந்தை இது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்வதற்கான சேவைகளைத் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற ரயிலில் நாடுமுழுவதும் பிறந்த 37வது குழந்தை இதுவாகும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.