மகாவீர் ஜெயந்தி: சேலத்தில் வட இந்தியர்கள் ரத யாத்திரை!
மகாவீர் ஜெயந்தியையொட்டி சேலத்தில் வட இந்தியர்களின் பாரம்பரிய ரத யாத்திரை நடைபெற்றது.
மகாவீர் ஜெயந்தியையொட்டி சேலத்தில் வட இந்தியர்களின் பாரம்பரிய ரத யாத்திரை நடைபெற்றது.
சமண துறவி மகாவீர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் ரத யாத்திரை நடைபெற்றது.
செவ்வாய்ப்பேட்டை ஜெயின் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்திலிருந்து ரதயாத்திரை புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. வட இந்தியப் பெண்கள் உள்பட ஏராளமானோர் பாரம்பரிய உடையணிந்து ஊர்வலமாகச் சென்றனர்.
summary