இந்தியா

மீண்டும் மனிதநேயம் தோற்றுவிட்டது: யானையின் வலியை உணர்த்தும் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம்

கரோனா பரவல் பற்றிய செய்திகளையும் தாண்டி, மக்களின் மனதில் இடியென விழுந்த ஒரு சம்பவம் அன்னாசிப் பழத்துக்குள் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானையைக் கொலை செய்த கொடூரர்களைப் பற்றியதுதான்.

DIN


கரோனா பரவல் பற்றிய செய்திகளையும் தாண்டி, மக்களின் மனதில் இடியென விழுந்த ஒரு சம்பவம் அன்னாசிப் பழத்துக்குள் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானையைக் கொலை செய்த கொடூரர்களைப் பற்றியதுதான்.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வலி மற்றும் பசியால் துடித்த அந்த யானை, தனது வலியை பொதுமக்களை தாக்கி, பொருள்களை சேதப்படுத்திக் கூட வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஒரு சேய்க்கு தாயாக இருந்த காரணத்தாலோ என்னவோ, அவ்வளவு வலியையும் அமைதியாக பொறுத்துக் கொண்டு ஆற்றிலேயே நின்று தனது உயிரை விட்டது. மனிதர்களை நம்பி ஏமாந்த கர்ப்பிணி யானையோடு, இதுபோன்ற கொடூர மனிதர்களைக் கொண்ட உலகில் பிறக்காமலேயே மரணத்தை சந்தித்த சிசு யானைக்கும் சேர்த்து மக்கள் கண்ணீரை சிந்தினர்.

இந்த நிலையில்தான் இந்தியாவில் புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில், யானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணற்சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.

மனிதநேயம் மீண்டும் ஒரு முறை தோற்றுவிட்டது என்று அந்த சிற்பத்தின் புகைப்படத்தை சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT