இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் பலி, 4 பேருக்கு புதிதாக தொற்று

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு காவலர் பலியானார். இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,561 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 9,851 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 6348ஆக உயர்ந்துள்ளது.  தற்போது 1,10,960 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இதுவரை 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகளவு பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,436 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாநிலத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,229 ஆக உள்ளது. இதுவரை 2,849 பேர் பலியாகியுள்ளனர். அதே போல 35,156 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT