இந்தியா

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 1.25 லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 1,25,000 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

DIN

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 1,25,000 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்றிச் செல்ல வடகிழக்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை இயக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டதாக என்.எப்.ஆர் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சுபனன் சந்தா தெரிவித்துள்ளார். 

மேலும், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மேலும் 13,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் விரைவில் அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி! தில்லி தீயணைப்புப் படைக்கு ஒரே நாளில் 170 அவசர அழைப்புகள்!

கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ரூ. 75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT