முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 1,282 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 1,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


தில்லியில் புதிதாக 1,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்களை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,936 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17,125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதிதாக 335 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,999 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 812 பேர் பலியாகியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →