தில்லியில் புதிதாக 1,007 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,007 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,007 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தில்லியில் புதிதாக 1,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 29,943 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 17,712 பேர் சிகிச்சையில் உள்ளனர்.11,357 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 874 பேர் பலியாகியுள்ளனர்.