உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகர் நியமனம்
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தலைநகராக டேராடூன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக சமோலி மாவட்டத்தில் உள்ள கெய்ரிசானை தேர்வு செய்து கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.
தற்போது கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை தேர்வு செய்த அரசின் முடிவிற்கு, மாநில ஆளுநரான பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.