இந்தியா

கேரளத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று

DIN


கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 65 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, கேரளத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,238 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 907 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

திருச்சூரில் 87 வயது முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதில், இன்று முடிவுகள் வெளியானது. அதில், அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 65 பேரில் 34 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 25 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT