இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியனின் சுகூ பகுதியில் இன்று காலை, தீவிரவாதிகள் சுற்றித் திரிவதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றிவளைத்து, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நடவடிக்கையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும். மேலும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தளபதி உட்பட ஒன்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT