இந்தியா

தில்லியில் 2,098 பேர் கரோனாவுக்கு பலி? உள்ளாட்சி அமைப்புகளின் தகவலால் குழப்பம்

​தில்லியில் சுமார் 2,098 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியிருப்பதாக வடக்கு தில்லி நகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

DIN


தில்லியில் சுமார் 2,098 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியிருப்பதாக வடக்கு தில்லி நகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலங்களில் தில்லியும் ஒன்று. தில்லி அரசால் கடைசியாக வெளியிடப்பட்ட நேற்றைய (புதன்கிழமை) செய்திக் குறிப்பில், கரோனா தொற்றால் 984 பேர் பலியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுமார் 2,098 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி வடக்கு தில்லி நகராட்சி நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

"தில்லியின் மூன்று நகராட்சிகளிலும், மார்ச் முதல் ஜூன் 10 வரை கரோனா தொற்றால் பலியான சுமார் 2,098 சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 200 பேர் கொொண்ட ஆவணங்களும் தனியாக வழங்கப்பட்டுள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு! ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம்!

காஞ்சி ஏலேல விநாயகருக்கு 17 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

SCROLL FOR NEXT