ஒடிசாவில் 112, உ.பி.யில் 58 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று
ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் விவரத்தை அந்த மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் விவரத்தை அந்த மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஒடிசா
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,498 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,354 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
Advertisement
உத்தரப் பிரதேசம்
இந்த மாநிலத்தில் கரோனா பரிசோதிக்கப்பட்ட 1,916 மாதிரிகளில் 58 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (KGMU) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று காரணமாக 396 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.