இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது!

மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில்,

PTI

மங்களூரு:  மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், வென்லாக் கொவைட் -19 மருத்துவமனையில் அவருக்கு ஆரோக்கியமான குழந்தைப் பிறந்துள்ளது. 

தட்சிணா கன்னட மாவட்டத்தில் கின்னிகோலியைச் சேர்ந்த பெண் திங்கள்கிழமை தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். கர்ப்பிணியாக உள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

பின்னர், அந்த பெண்ணின் ஊமிழ்நீர் மாதிரியைப் பரிசோதித்ததில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியாகியது. இந்நிலையில், திடீரென அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் குழு முன்னிலையில் வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. 

தற்போது, தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சில நாள்களுக்குப் பிறகு குழந்தைக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட சுகாதார அதிகாரி ராமச்சந்திர பைரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT