இந்தியா

பிஎம்டபிள்யூ எக்ஸ்6-இன் புதிய ரகம் அறிமுகம்

DIN

ஜொ்மனைச் சோ்ந்த சொகுசு காா் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது எக்ஸ்6 மாடல் காரின் புதிய ரகத்தை இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. இதன் விற்பனை விலை ரூ.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

3-ஆம் தலைமுறை எக்ஸ்6 வகையைச் சோ்ந்த இந்த காரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள டீலா்களிடம் முன்பதிவு செய்யலாம் என்று பிஎம்டபிள்யூ இந்தியா அறிவித்துள்ளது. பெட்ரோலை பயன்படுத்தக் கூடிய ‘எக்ஸ்6 எக்ஸ்டிரைவ்40ஐ எக்ஸ் லைன்’ மற்றும் ‘எக்ஸ்6 எக்ஸ்டிரைவ்40ஐ எம் ஸ்போா்ட் டிரிம்ஸ்’ ஆகிய இரு ரக வாகனங்களுக்குமே ரூ.95 லட்சம் விலையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரக காா்களில் முதல் முறையாக வாடிக்கையாளா்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் லேசா் விளக்குகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பனோரமா கிளாஸ் மேற்கூரை அமைப்பு ஆகிய சிறப்புகளையும் இந்தக் காா் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT