முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் எம்எல்ஏ-வுக்கு கரோனா தொற்று

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூன், 2020 at 5:08 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM


தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வரும் அவர், தெலங்கானா உருவான தினத்தைக் கொண்டாடுவதற்காக கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொகுதிக்குச் சென்றிருந்தார். இதையடுத்து, மற்றொரு நிகழ்ச்சிக்காக மீண்டும் ஜூன் 5-ஆம் தேதி தொகுதிக்குச் சென்றார்.

Advertisement

எனவே, தொகுதி பயணத்தின்போது எம்எல்ஏ-வுடன் இருந்தவர்களை புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மூலம் கண்டறியும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ள முதல் தெலங்கானா எம்எல்ஏ இவர்தான்.

இதனிடையே, நிதியமைச்சர் ஹரீஷ் ராவின் உதவியாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அமைச்சரும் தனிமைப்படுத்திக்கொண்டார். அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த 17 பேருக்கும் வெள்ளிக்கிழமை தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.