இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000 ஆக அதிகரிப்பு!

DIN

பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா நோய்தொற்றுக்கு உள்ளனோரின் மொத்த எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 3,21,963 பேர் கரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,204 ஆக உள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் கரோனா நோய்தொற்றுக்கு உள்ளனோரின் மொத்த எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை ஞாயிறு மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலத்தில் கரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT