இந்தியா

மகாராஷ்டிரம்: கடந்த 72 மணி நேரத்தில் 227 காவலர்களுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக 227 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம்தான். அங்கு பணியில் இருக்கும் காவலர்களும் அதிகளவில் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில், கரோனா தடுப்புப் பணியில் காவல் துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ள காவலர்கள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக 227 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் காவலர்களின் எண்ணிக்கை 1,388 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா தொடர்பாக மார்ச் 22 முதல் இதுவரை 26,654 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 82,317 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ. 7,55,73,352 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT