இந்தியா

தெலங்கானாவில் ஒரேநாளில் பத்திரிகையாளர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தெலங்கானாவில் ஒரேநாளில் பத்திரிகையாளர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

தெலங்கானாவில் ஒரேநாளில் பத்திரிகையாளர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப்  பரவி வரும் நிலையில் கரோனா தடுப்புப்  பணியில் ஈடுபட்டுள்ள பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பத்திரிகை நிருபர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர்கள் 237 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 23 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

மொத்தமாக தெலங்கானாவில் பத்திரிகையாளர்கள் 60 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தெலங்கானாவில் இதுவரை 4,974 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,. இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,377 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் தரிசனம்

பயங்கரவாதம், போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

குவாஹாட்டி டெஸ்ட்: முதல் நாளில் தென்னாப்பிரிக்கா 247 ரன்கள் குவிப்பு!

சிவப்பு காதல்... காஷிகா சிசோதியா!

செங்காந்தளே... மீனாட்சி சௌதரி!

SCROLL FOR NEXT