இந்தியா

ஆந்திரத்தில் இறப்பு விகிதம் 1.33 சதவீதமாகக் குறைந்தது: ஒரே நாளில் 246 பேருக்குத் தொற்று

PTI

ஆந்திரத்தில் மேலும் 246 பேருக்குப் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 5,086 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

திங்கள்கிழமை காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. 

ஆந்திரத்தில் இறப்பு விகிதம் 1.43 சதவீதத்திலிருந்து 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, இறப்பு விகிதத்தில் இந்தியாவில் 9வது இடத்தை ஆந்திரா பிடித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதம் திங்களன்று 2.86 சதவீதமாக உள்ளது. 

ஒரே நாளில் 47 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இதுவரை 2,770 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். திங்கள்கிழமை காலை 9 மணி வரை 24 மணி நேரத்தில் 15,173 மாதிரிகளையும் பரிசோதித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கரோனா தொற்று அதிகளவில் பதிவாகியுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT