இந்தியா

தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. 

DIN

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. 

நேற்று இரவு கடும் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவுக் குறைந்ததன் காரணமாக, தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சற்றுமுன் அவரது பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா தடுப்புப் பணியில் ஓய்வின்றி ஈடுபட்டு வந்ததாகவும், அவர் விரைவில் மீண்டு பணியில் ஈடுபடுவார் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT