இந்தியா

எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்? ப. சிதம்பரம் கேள்வி

DIN


சீனாவுடனான மோதலில் எத்தனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை அரசு அதிகார பூர்வமாகத் தெரிவிக்காதது ஏன் என்று பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?

சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?"

இதனிடையே, இந்தியத் தரப்பில் 20 வீரர்களும், சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகவே மேற்கோள்காட்டி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT