இந்தியா

புதுவையில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மேலும் ஒரு முதியவர் பலி

DIN

புதுவையில் அதிகபட்சமாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு முதியவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் லாசுப்பேட்டை, கைக்கிளப்பட்டு, மணலிப்பட்டு, செல்லிப்பட்டு, முத்தியால்பேட்டை, வாழைக்குளம், கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 பேரும், ஜிப்மரில் 3 பேரும், காரைக்காலில் 2 பேரும் என மேலும் 30 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது அதிகபட்சமாக 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 10  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி விவிபி நகரைச் சேர்ந்த 80 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். அவர் ஜிப்மரில் சலவைப் பிரிவில் பணியாற்றி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவரின் தாத்தா ஆவார்.

இதன் மூலம் புதுவையில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 245 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 131 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT