பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சர்வதேச மகளிர் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்! கல்வியறிவு பெற்ற மற்றும் முன்னேற்றமடைந்த பெண்களே முன்னேற்றத்தை நோக்கியதொரு நாட்டின் தூண்களாவர். பெண் சக்தி தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் துணிச்சலுடன் திறம்பட ஜொலிக்கிறது. இது, செழிப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான அடித்தளத்தை பலப்படுத்துவதாக அமைகிறது.
இத்தருணத்தில், ஒவ்வொரு பெண்ணும் சம வாய்ப்புகளுடன் வளர்ச்சி பெறவும் மாண்புடனும் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் வாழவும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க நமது ஒருங்கிணைந்த கடமையை மீண்டும் உறுதியேற்றுக்கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
The President extends Womens Day 2026 greetings
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.