இந்தியா

கரோனா: இந்தியாவில் குணமடையும் விகிதம் 53.79 சதவீதமாக அதிகரிப்பு

DIN

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் 53.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில், 10,386 கொவைட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,04,710 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  குணமடையும் விகிதம் 53.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,63,248 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
தினமும் கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைவோர் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. உரிய காலத்தில் கொவைட்-19 தொற்றை நிர்வகிக்க இந்தியா வகுத்த உத்தியின் விளைவாக குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.
அரசு பரிசோதனைச் சாலைகள் 703 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 257 ஆகவும் (மொத்தம் 960) அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், 1,76,959 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 64,26,627 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
 மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மருத்துவமனைகளில் கொவைட் மற்றும் கொவிட் அல்லாத மருத்துவப்பிரிவுகளில் பணி புரியும் மருத்துவ பணியாளர்களுக்கான ஆலோசனை நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT